டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சியினர் அறிவிப்பு.
செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, இதன் மிக அருகில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு மாணவியர் விடுதி, அரசு பொது மருத்துவமனை, அரசு பத்திரப்பதிவு அலுவலகம், தேவாலயம், பிஎஸ்என்எல் அலுவலகம், மயானம் உள்ளிட்டவை இருப்பதாலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இருப்பதாலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் இந்த மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும் அரசியல் கட்சியினர் தரப்பிலும் பல்வேறு அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
ஆனால் தற்போது வரை அந்த மதுபான கடையை அப்புறப்படுத்தாமல் மேலும் அவ்விடத்திலேயே பார் நடத்திக் கொள்ள அனுமதி அளித்ததால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவ மாணவிகள், அரசு பணியாளர்கள் நோயாளிகள் குடிமகன்களின் அட்டகாசத்தால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் வரும் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறுநெசலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவித்து துண்டு பிரசுரம் விநியோகித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
– செய்தியாளர் கொ. விஜய்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, இதன் மிக அருகில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு மாணவியர் விடுதி, அரசு பொது மருத்துவமனை, அரசு பத்திரப்பதிவு அலுவலகம், தேவாலயம், பிஎஸ்என்எல் அலுவலகம், மயானம் உள்ளிட்டவை இருப்பதாலும்,
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இருப்பதாலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் இந்த மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும் அரசியல் கட்சியினர் தரப்பிலும் பல்வேறு அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.