டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆமா முகவினர் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் நல்லூர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டி மணி மஹால் வரையிலும் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போட்டி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவு, ஆண்கள் பெண்கள் என நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் உட்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 1500 பேர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்அரசியல்டிடிவி தினகரன் 60வது பிறந்த நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர்திருப்பூர் மாவட்டம்போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான்