BREAKING NEWS

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மகள் 9-வது இடம்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மகள் 9-வது இடம்.

தூத்துக்குடி: தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது.

 

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகள் ஷீஜா மாநில அளவில் 9-வது இடம்பிடித்துள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும். மாநில அளவில் 9-வது இடம் பெற்றது குறித்து ஷீஜா கூறுகையில், சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டுவிடாமுயற்சியில் படித்தேன். எனது பெற்றோரின் உதவியுடன் இந்நிலைக்கு வந்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )