தக்காளி மொத்த விலை கிலோ ரூ90க்கு விற்பனை!!
தக்காளி மொத்த விலை கிலோ ரூ90க்கு விற்பனை!!
தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள் ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து தினசரி லாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் பருவநிலை மாற்றம், தொடர் மழை காரணமாக காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 80 முதல் 90 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் 100 ரூபாய்க்கும் விற்பனையானது
கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. தினசரி 75 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. சென்னைக்கு தினமும், 10 லட்சம் கிலோ தக்காளி தேவையுள்ள நிலையில், நேற்று 40 லாரிகளில், 6 லட்சம் கிலோ தக்காளி வந்துள்ளது.இந்நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக்கதிதல் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் என கூறினார்.முதற்கட்டமாக நேற்று ஒரு கிலோ தக்காளி 70 முதல் 85 ரூபாய் வரை விற்கப்பட்டது என்றும் தேவையை பொறுத்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.