BREAKING NEWS

தங்கர் பச்சானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்.

தங்கர் பச்சானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்.

முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன. இந்த படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கிறார்கள்.

மக்களுக்குப் போராட உரிமை உண்டு'- விவசாயிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு | GV  prakash supports farmers protest - hindutamil.in

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சான் தற்போது ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை, பிரபல நாயாகியாக தேர்வு செய்து வருகிறார்கள். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இவர் இணைந்து பணிபுரிகிறார். என்.கே.ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜூலை 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து ஈரம் காயாத விழிகளுடன் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?” என அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளார் தங்கர் பச்சான்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )