BREAKING NEWS

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

 

இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி பெரிது உதவிகரமாக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேசினார்.

 

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் இன்று அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது, இதனை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார் இக்காண்ட்சியானது இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறும் .

 

திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்று பேசினார். பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நோக்கவுரை வழங்கினார். 

 

 

 நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கு இது போன்ற கண்காட்சிகள் பெரிது உதவிகரமாக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேசினார்.

 

 மேலும் அன்றைய காலகட்டத்தில் காலத்தை நிலைநிறுத்தம் புகைப்படக் கருவிகள் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் பல சுதந்திர போராட்ட தியாகிகளை நாம் அறிய முடியவில்லை என்றும் மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் காலத்தை நம் கண் முன்னே நிறுத்தி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகங்களை போற்றுவதாக பேசினார்.

 

 நிகழ்ச்சியில் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை,

நமது நாடு பல்வேறு வகையில் சிறப்பான முன்னேற்றத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

 

இதற்கு அடிதளமாக இருந்தவர்கள் யார் என்பதை நினைத்து பார்த்து, நமது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தி வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. நமது பாடபுத்தகத்தில் படிக்கும் போது தேசிய,மாநில அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தான் படித்து இருப்போம். அதையும் தாண்டி ஒவ்வொரு பகுதிகளிலும் சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர்.

 

 

அவர்களை பற்றிய குறிப்புகள் வரலாற்று பாடங்களில் இருந்து இருக்காது. சமூகத்திற்கு ஆணி வேராக இருந்த சுதந்திர வீரர்கள்,தலைவர்களை பற்றி இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கான தான் மத்திய மக்கள் தொடர்பகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

 

நாம் அனைவரின் வாழ்க்கை தேவையான மருத்துவம்,கல்வி,முதியவர் ஒய்வூதியம் என பல்வேறு திட்டங்களை மத்திய,மாநில அரசுக்கள் செயல்படுத்தி வருகிறது. அரசு செயல்படுத்தாத திட்டங்களை இல்லை. இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 

அப்படி அறிந்துக்கொள்ளும் போது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பேசினார். இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

 

இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. 

 

இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

 

 

 மேலும் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்டம் சமூகநலத்துறை சுற்றுலாதுறை தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் வேளாண் துறை உள்ளிட்ட துறைகளின் சர்வின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

 நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பாக இயக்குனர் காமராஜ், தஞ்சாவூர் மண்டல மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் ஆனந்த பிரபு, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன்,

 

திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் திட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )