BREAKING NEWS

தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார்

தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார்

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 ந் தேதி உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது இதனையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

இந்த நடை பயண விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தஞ்சை குழந்தை இயேசு கோவில் பகுதியில் இருந்து தொடங்கிய இப்பேரணியில் மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் எடுத்துச் சென்றனர் இப்பேரணியில் கூடுதல் எஸ்பி பிருந்தா உள்ளிட்ட மருத்துவர்கள் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )