தஞ்சாவூரில் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள்; பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு அஷ்டமி விழா தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் அருள்மிகு பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம்,
தஞ்சை கீழவீதி ஸ்ரீ மங்கள நாயகி ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் கரந்தை அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் என்கிற கருணாசுவாமி திருக்கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு ஹோமம் அபிஷேகம் செய்யப்பட்டு,..
காலபைரவருக்கு வடை மாலை சாத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆன்மிகம்கள்ளபெரம்பூர் அருள்மிகு பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம்காலபைரவர் ஜெயந்திதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்