BREAKING NEWS

தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.

இன்றைய கல்லூரி மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் தனியார் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து மோட்டார் சைக்கிள் வாகன மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது.

 

 

இப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்து பாடல் நிறுத்தப்பட்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு இருந்த இருக்கையில் ஓடி அமர்ந்தனர், இது ஒரு புது விதமான போட்டியாக இருந்தது இறுதியில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியில் தனியார் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு தோல்வியை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டினார், இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS