தஞ்சாவூரில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு.
தஞ்சாவூரில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.ரவிச்சந்திரன்(57) மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மருங்குளம் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 1993ம் ஆண்டு காவல்த்துறை பணியில் சேர்ந்தார்.
தற்போது தஞ்சாவூர் போக்குவரத்து விசாரணை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் பணியில் இருந்தபோது, ரவிசந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவருக்கு மனைவி சுமதி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் இறந்ததையடுத்து அவரது உடலுக்கு காவல்த்துறை அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.