தஞ்சாவூரில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புவிசார் குறியீட்டு பெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது

இக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் 2 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களான பஞ்சலோக சிலைகள்

தஞ்சாவூர் கலைத்தட்டு தஞ்சாவூர் ஓவியங்கள் நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் நெட்டியால் ஆன கைவினைப்பொருட்கள் தஞ்சாவூர் வீணைகள் கருப்பூர் கலம் காரி ஓவியங்கள் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் திருபுவனம் பட்டுப்புடவை ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன,

இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர் இந்நிகழ்ச்சியில் இண்டாக் கௌரவ செயலாளர் முத்துகுமார் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
