BREAKING NEWS

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!

● 50 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை திட்டத்தை இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

● 50 வயதிற்கு கீழ்ப்பட்ட வயதிற்கு நீரிழிவிற்கான ஸ்க்ரீனிங் சோதனை கட்டணத்தில் 50% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர், 28 ஜுன் 2022: இதய செயல்பாட்டில் பாதிப்பு என்ற கடந்தகால வரலாறு கொண்ட 57 வயதான ஒரு நபருக்கு செய்யப்பட்ட விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை (VR) வெற்றி பெற்றிருப்பதை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தஞ்சாவூர் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. தஞ்சாவூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டின் மருத்துவ வரலாற்றிலும் இந்த அறுவைசிகிச்சை முதன்முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த திரு. விஜயகுமார் என்ற நபருக்கு 2022 மார்ச் மாதத்தில் அவரது இடது கண்ணில் பார்வைத்திறனிழப்பு ஏற்பட்டது. திரு. விஜயகுமாரின் மகன் ஒரு மருத்துவராக இருக்கின்ற நிலையில் இப்பிரச்சனையின் தீவிரத்தை நன்கு புரிந்துகொண்ட அவர், அதற்கு அடுத்த நாளே இந்த விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை (VR) செய்து கொள்வதற்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையை அணுகினார். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு CFCF – ன் V/A என்ற அறுவைசிகிச்சைக்கு முந்தைய நிலையிலிருந்து இவரது பார்வைத்திறன் 6/9 என்பதாக முன்னேற்றம் கண்டிருக்கிறது.

மக்கள் மத்தியில் கண் நோய்கள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிறப்பான சிகிச்சை வசதிகள் பற்றி விழிப்புணர்வு குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கும் தஞ்சாவூர்-டாக்டர். அகர்வால்ஸ், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை / ஆலோசனை சேவையை வழங்குகிறது; மேலும், நீரிழிவு, கண்பரிசோதனை / ஆலோசனை சேவைகள் தொகுப்பு கட்டணத்தில் 50% தள்ளுபடியையும் இது வழங்குகிறது. இந்த இரு சிறப்பு சலுகைத் திட்டங்களும் 2022 ஜுலை 31-ம் தேதி வரை செயல்பாட்டிலிருக்கும்.

தஞ்சாவூர் – டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர். T சாந்தி இதுபற்றி கூறியதாவது: “இன்றைக்கு உண்மையிலேயே அதிக திருப்தியுள்ள நபராக இந்த அறுவைசிகிச்சையை செய்துகொண்ட திரு. விஜயகுமார் இருக்கிறார். அவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தபோது அவரது இதய பாதிப்பின் காரணமாக அவரது விழித்திரையில் ஏற்பட்டிருந்த சேதத்தின் கடுமையான தீவிரத்தைக்கூட அறிந்தவராக இருக்கவில்லை. ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டதற்குப் பிறகு, அவரது பார்வைத்திறனை அவர் திரும்பவும் பெறுவார் என்ற உத்தரவாதத்தையும், வாக்குறுதியையும் நாங்கள் அவருக்கு வழங்கினோம்.”

“சிகிச்சைக்கு வந்ததற்கு அடுத்த நாளிலேயே இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றது. ஏறக்குறைய 75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையில் கசிவுகள் ஏதும் இல்லாததை நாங்கள் உறுதி செய்தோம்; சிலிக்கான் ஆயில் சீலண்ட் மிக உறுதியாக பொருத்தப்பட்டது. சிக்கலான கண் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்யக்கூடிய உலகத்தரத்திலான மருத்துவமனையை தஞ்சாவூரில் நாங்கள் கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேலும் சிக்கலான கண் அறுவைசிகிச்சைகளுக்காக மதுரைக்கோ அல்லது சென்னைக்கோ எவரும் பயணிக்க வேண்டியதில்லை,” என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைமை அதிகாரி டாக்டர். R. கலாதேவி கூறினார்.

“நிரந்தரமாக தான் இழந்துவிட்டதாக கருதிய பார்வைத்திறனை சிகிச்சையின் மூலம் திரும்பப் பெற்றுத் தந்ததற்காக தனது பாராட்டையும், மனமார்ந்த நன்றியையும் திரு. விஜயகுமார் தெரிவித்தார். கண் கண்ணாடி உதவி இல்லாத நிலையில் அவரது இறுதி பார்வைத்திறன் 6/9 என்பதாக இருக்கிறது.” என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை விழித்திரை சிறப்பு நிபுணர் டாக்டர். N. பத்ம பிரீத்தா கூறினார்.

ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசிய நோயாளியான திரு. விஜயகுமார், “எனது பார்வைத்திறனை நான் திரும்பப் பெறுவேன் என்ற உத்தரவாதமும், உறுதியும் டாக்டர். சாந்தி மற்றும் அவரது குழுவினரால் எனக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் எனது முழு நம்பிக்கையையும் அவர்கள் மீது வைக்க நான் முடிவு செய்தேன். நான் இழந்திருந்த பார்வைத்திறனை இன்றைக்கு இந்த அறுவைசிகிச்சை மூலம் திரும்பப் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறினார்.

“எங்களிடம் திரு. விஜயகுமார் சிகிச்சைக்காக வருவதற்கு முன்பேயே இதைவிட மிக மோசமான பாதிப்பு நேர்வுகளை நாங்கள் கையாண்டிருக்கிறோம். சிக்கல் மிகுந்த இந்த அறுவைசிகிச்சைகளை செய்வதில் அதிக திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவர்கள் மீது மட்டுமின்றி, மிக நவீன மாடுலர் அறுவைசிகிச்சை அரங்கம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் லேசர் சாதனங்களும் எமது மருத்துவமனையில் இருப்பதால் உலகத்தரத்தில் சிகிச்சையளிப்பதில் நாங்கள் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். VR என அழைக்கப்படும் இந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்ள இப்போது அதிக நபர்கள் வருகின்ற போதிலும், இதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவது இக்காலகட்டத்தில் அத்தியாவசியமாக இருக்கிறது. கண் பாதிப்பிற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் விடப்படுமானால், பார்வைத்திறனிழப்பு நிரந்தரமாகிவிடுவதற்கு அது வழிவகுக்கும்,” என்று டாக்டர். சாந்தி மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )