தஞ்சாவூரில் மூத்த குடிமக்களே கௌரவிக்கும் வகையில் மத்திய அஞ்சல் மண்டலத்தில் அகவை 60 அஞ்சல் 20 சிறப்பு முகாம் தொடக்கம்.

அஞ்சலக சேமிப்பு வங்கியானது பலதரப்பட்ட மக்களுக்கும் சேமிப்பு வங்கி சேவையை வழங்கி வருகிறது இதன்படி மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு வங்கி கணக்கு உள்ளது மத்திய அஞ்சல் மண்டலத்தில் மே மாதம் வரை 61800 மூத்த குடிமக்கள் கணக்குகள் உள்ளது இதனையடுத்து கிராமப்புறத்தில் உள்ள மக்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அகவை 60 அஞ்சல் 20 என்ற சிறப்பு முகாம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மத்திய அஞ்சல் மண்டல தலைவர் அப்பாகண்ணு கோவிந்தராஜன் அஞ்சல் மண்டல இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து அகவை 60 அஞ்சல் 20 என்ற லோகோவினையும் வெளியிட்டனர் இந்நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
