தஞ்சாவூரில் வீடற்றோருக்கான இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் வீடற்றோருக்கான இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
உலக வீடற்றோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10 ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு
தஞ்சாவூரில் மாநகராட்சி சார்பில் தஞ்சை மகர் நோன்பு சாவடி பகுதியில் உள்ள வீடு அற்றோருக்கான முதியோர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ராமநாதன் கலந்து கொண்டு முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் இதில் பாஜக வார்டு கவுன்சிலர் ஜெய் சதிஷ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்