தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.
![தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார். தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-12-at-11.12.25-AM.jpeg)
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். இருவரும் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பெரியகோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு மாலையில் இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் சாலையில் பிள்ளையார் கோயில் பகுதியில் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, லிதர்ஷன் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.
இவரைக் காப்பாற்றுவதற்காக நிதின் மற்றும் அருகில் இருந்தவர்கள் முயன்றனர். ஆனால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட லிதர்ஷனை காணவில்லை. இவரை தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்