BREAKING NEWS

தஞ்சாவூர் திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

இதை அடுத்து தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள கில்டாப் சர்வீஸ் பெண்கள் காப்பகத்தில் நேற்று தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் தஞ்சாவூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பாக 50 மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நேற்று முதல் 29ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக உணவு வழங்கப்பட உள்ளன.

 

இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர் எம் கே கார்த்திக், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ஒன்றிய இணைச்செயலாளர் ஜெய பிரபாகர், இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் மாரியம்மன் கோவில் ஜெயபாண்டி, பழனியப்பன் வழக்கறிஞர் மறியல் பழனியப்பன் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )