BREAKING NEWS

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி ஊராட்சியில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் படி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி..

 

 

 தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் 01.11.2022 செவ்வாய்க்கிழமை இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.அ.உதயகுமார் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப முன்னிலையில் நடைப்பெற்றது.

 

 

இக்கூட்டத்தில் கொரோனா காலம் முதல் தற்போது வரை சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் வட்டாட்சியர் திரு.சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபாகரன், திரு.அறிவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.சௌமியாஜனார்த்தனன்,

 

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.ஜெயந்திசதானந்தம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள்,

 

அங்கன்வாடி பணியாளர்கள், அங்காடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )