தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்.
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்.


கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புவிசார் குறியீட்டு கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது இக் கண்காட்சியினை மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆணையர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களான பஞ்சலோக சிலைகள் தஞ்சாவூர் கலைத்தட்டு தஞ்சாவூர் ஓவியங்கள் நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் நெட்டியால் ஆன கைவினைப்பொருட்கள் தஞ்சாவூர் வீணைகள் கருப்பூர் கலம் காரி ஓவியங்கள் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன,

இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
