BREAKING NEWS

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஆர்.பாலாஜிநாதனிடம் அதற்கான பொறுப்புகளை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை வழங்கினார். 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஆர்.பாலாஜிநாதனிடம் அதற்கான பொறுப்புகளை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை வழங்கினார். 

 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற முயற்சிக்கப்பட்டு வருவதாக புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்தார்.

 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக ஆர்.பாலாஜிநாதன் நியமிக்கப்பட்டு, நேற்று அவர் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பழமையான, மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ள தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதால், இப்பகுதி மக்களிடம் நம்பிக்கையை பெற்று திகழ்கிறது. இந்த சேவையை மேலும் மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

 

இந்த மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அதிகளவில் இத்திட்டத்தில் சிகிச்சை அளி்க்கப்பட்டதால் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதை முதலிடத்துக்கு கொண்டு வரும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

தேசிய தரச்சான்றிதழ் பெற தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் நோயாளிகளை கனிவாக கவணித்தல், விரைவாக சிகிச்சை அளித்தல், சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறது.

 

 

இம்மருத்துவமனையில் குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், வெளிநபர்களின் நடமாட்டங்களை குறைக்கும் வகையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட உள்ளது.

 

இம்மருத்துவமனையில் போதியளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. தடுப்பாடு ஏதும் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் நாய்கள், மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

புறநோயாளிகளுடைய சிகிச்சை முறைகள் தொடர்பாக கணினியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 

விரைவில் இந்த பணிகள் முடிவடைந்ததும், நோயாளி ஒருவர் தன்னிடம் உள்ள அடையாள எண்ணைக் கொண்டு மாநிலத்தில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சையும், மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

மருத்துவமனை வளாகத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவ சிகிச்சை மையத்தின் அருகிலேயே சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை அமைக்கப்படும்.

 

தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உரிய வசதிகள் ஏற்படுத்துவதோடு, அங்கு பெண் பாதுகாவலர்களை நியமிக்கப்படும் என்றார்.

 

 

அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம் மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )