தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் 35 அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல்.

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறை வசதிகளுடன் கொண்ட அங்கன்வாடி மையம் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த அங்கன்வாடி மையத்தினை மாநகராட்சி மேயர் ராமநாதன் திறந்து வைத்தார்,

இந்த அங்கன்வாடி மையத்தில் பள்ளிக் குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு தத்ரூபமாக காட்சியளிக்கின்றன மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வசதியுடன் 35 அங்கன்வாடி மையம் திறக்கப்பட உள்ளன என்று மாநகராட்சி மேயர் ராமநாதன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், பள்ளிக் குழந்தைகள் அங்கன்வாடி ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
