தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணை.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
கூட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி மேயர் ராமநாதன் தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்கள் 5 பேருக்கு துப்புரவு பணி செய்ய பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பொதுவாக நரிக்குறவர் இன மக்கள் அவர்களது தொழிலை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் இந்நிலையில் பொருளாதார சூழ்நிலை கருதி நரிக்குறவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விழிம்பு நிலை மக்களான நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது