தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 88 ஆயிரத்து 837 நபர்கள்,
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 42 ஆயிரத்து 392 நபர்கள் மற்றும் இதர பாலினத்தவர்கள் 155 நபர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20 லட்சத்து 31 ஆயிரத்து 384 ஆகும் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் கும்பகோணம் பாபநாசம் திருவையாறு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன,.
இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுக பால்வளத் தலைவர் காந்தி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.