BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படுமென்ற தமிழக அரசின் அறிவிப்பிற்க்கு நன்றி தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மாணம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.முகில் தலைமையில் செங்கிப்பட்டியில் நடைப்பெற்றது.கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் இரா.இராமச்சந்திரன்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கார்த்திக்,வீ.சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சு.லதா,மாரிமுத்து,சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீண்டும் திருக்காட்டுப்பள்ளியில் உடற்கூறு ஆய்வு செய்வதற்கான வசதியை ஏற்படுத்திட வேண்டுமென்ற கோரிக்கைக்கு தீர்வு கண்டிட அரசின் கவணத்திற்கு கொண்டு சென்று சட்டமன்றத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிட செய்த திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.சந்திரசேகரன் அவர்களுக்கும் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )