BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம், ரோட்டில் சிதறிய தேங்காய்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம், ரோட்டில் சிதறிய தேங்காய்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சார்பில் மாபெரும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 ம் உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 ம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,

ரேசன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கி நால்ரோடு பகுதியில் இருந்து தென்னை விவசாயிகள் தென்னை வியாபாரிகள் உள்ளிட்டோர் என ஏராளமானோர் பேரணியாக வந்து பதாகைகளை கொண்டு சென்றும் கோஷமிட்டும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு தேங்காயை உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )