BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.

 

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. சுமார் இரண்டு லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில்,

 

 

இது படிபடியாக அதிகரித்து சுமார் இரண்டு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.இந்த தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணையை வந்தடைந்ததும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. 

 

 

இந்நிலையில் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது.

 

 

இந்த வெள்ளப் பெருக்கினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான அணைக்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களின் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.

 

 

இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது குறிப்பாக பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி போயுள்ளது. இப்பகுதிகளில் தற்போது நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெல் பயிரும்,

 

 

வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 5- வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, ஏற்கனவே 4 முறை வெள்ளப் பெருக்கால் நாங்கள் எங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றோம்.

 

 

இந்நிலையில் 5வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் பெரும் கலக்கம் அடைந்துள்ளோம். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் உள்ளதாகவும்,

 

கிராம மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் கவலையுடன் இருந்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )