தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமானோர் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூரை அடுத்த மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ காளியம்மன் ஆகிய சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சித்திரைத் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் வீட்டுக்கு வீடு கிடாவெட்டு விருந்து நிகழ்வும் நடைபெற்றது. இதில் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
