BREAKING NEWS

தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர்,
குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனத்தை சிறுமைப்படுத்தும் நோக்கில் பத்திரிக்கை செய்தி வெளியிட்ட ஒரு பத்திரிக்கை நாளிதழை கண்டித்து
தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை மாநகர மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவரும், நிறுவனருமான சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ் கண்ணா, மாநில அவைத் தலைவர் பாரதிமோகன், மாவட்டத் தலைவர் ரகுராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் கணேஷ், மாவட்ட அமைப்பாளர் குரு சீனிவாசன், மாநகர அமைப்பாளர் பாலா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அந்த பத்திரிக்கை நிர்வாகத்தை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )