BREAKING NEWS

தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து  4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர்.

 

தஞ்சை வந்த அனைவரும் மாவட்ட ஆட்சியருக்கும், பா.ஜ.க.வினருக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தஞ்சையில் 116 பேர் கடந்த 30ம் தேதி இரவு காசிக்கு புனித யாத்திரை சென்றனர்.

 

 

அவர்களை தஞ்சையை சேர்ந்த அஞ்சலிதேவி என்பவர் பேருந்தில் சென்னை அழைத்து சென்று பாலாஜி என்ற ஏஜெண்ட்டிடம் ஒப்படைத்து உள்ளார். பாலாஜி அனைவரிடமும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு ரயில் மூலம் காசிக்கு அழைத்து சென்று உள்ளார்.

 

காசியில் தரிசனம் முடித்து விட்டு அனைவரையும் வாரணாசி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இவர்களில் சிலர் தனது சொந்த பணத்தை கொண்டு டிக்கெட் எடுத்து ஊர் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

 

42 பேர் பணம் இல்லாமல். ஊர் திரும்ப வழி தெரியாமல், மொழி புரியாமல், பசி, பட்டினியோடு நான்கு நாட்களாக வாரணாசி ரயில் நிலையத்தில் தவித்து வந்துள்ளனர்.

 

வாரணாசியில். தமிழ் அறிந்த பா.ஜ.க.வினர் இவர்களது நிலைமையை அறிந்து டிக்கெட் எடுத்து கொண்டு, உணவு அளித்து வாரணாசியில் இருந்து ரயிலில் சென்னனக்கு அனுப்பி வைத்தனர்.

 

சென்னை வந்து இறங்கிய அனைவரையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் சிறப்பு பேருந்து மூலம் தஞ்சை அழைத்து வர ஏற்பாடு செய்து.

 

10ம் இரவு அனைவரும் பாதுகாப்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தனர். அனைவரும் பா.ஜ.க.வினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )