தஞ்சையில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கீழவாசலை சேர்ந்த காதர் உசேன் (70) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர் உசேனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
