தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன முறை கொரோனா விழிப்புணர்வு.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 விட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக சுகாதாரத்துறை அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தஞ்சை மாவட்டத்திலும் சில தினங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தஞ்சை மாநகராட்சியில் மட்டும் 16 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் முக கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளி பிரியா அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அரசு உத்தரவை பின்பற்றி முகவசம் அணிந்து வந்த பொது மக்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இனிப்பு மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் முக கவசம் அணியாமல் அல்லது தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்காமல் வருபவர்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்து முக கவசம் வழங்கி வருவதாகவும் அடுத்து கண்டிப்பாக கடும் அபகாரம் வசூலிக்கப்படும் என தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் எச்சரித்து அனுப்பினார்
மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு காவல்துறையினர் இனிப்பையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பார்த்த பொதுமக்கள் இந்த நூதன முயற்சியை பாராட்டினர்.
மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தஞ்சை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி மேற்பார்வையில் அறக்கட்டளை களப்பணியாளர்கள் சிவரஞ்சனி அபர்ணா மற்றும் தன்னார்வலரான தஞ்சை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யை சேர்ந்த மாணவியர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.