தஞ்சையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தஞ்சாவூர் காந்தி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய கடைவீதி ஆகும் இந்த கடை வீதியில் ர்வீன் பாலம் அருகே பெட்ரோல் பங்க் பின் பகுதியில் இருந்து திடீரென புகை மூட்டம் எழும்பியதால் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பெட்ரோல் பங்கில் பின்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் மண்டி கிடைக்கக்கூடிய பகுதியில் மளமளவென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அந்த தீயை அணைத்தனர் அருகில் பெட்ரோல் பங்க் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர் இறந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்
