தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.
தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனை மரத்தில் பதனீர், கள் இறக்கி பனையேறிகள் வியாபாரம் செய்தனர். இந்த ஆண்டின் சீசன் இன்றுடன் நிறைவடைவதை ஓட்டி பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தஞ்சை மாவட்டம் துலுக்கன்பட்டியில் பனைமரம் தோப்பில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்று கூடி பனை மரத்திற்கு சந்தனம், குங்கும் இட்டு விளக்கு ஏற்றி களையத்தில் இறக்கப்பட்ட பனங்கள்,
மரம் ஏற பயன்படும் உபகரணங்கள், பனை ஓலை இவற்றை வைத்து ஊதுபத்தி, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிப்பாடு செய்தனர். சாமி கும்பிட்ட உடன் பனங்கள் சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்