BREAKING NEWS

தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது

தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரில் பெண்கள் கலந்து கொண்ட கோலப் போட்டி நடைபெற்றது.

 

 

இதில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலான கோலம் வரைந்தனர், மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் கல்வி அவசியம், பெண் கொடுமையை ஒழிப்போம், ஆண் பெண் சமம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும்,

 

 

குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை வண்ணக் கோலத்தில் எழுதி இருந்தனர் இதில் சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு போக்குவரத்துக் காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினர்.

 

CATEGORIES
TAGS