தஞ்சையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கு தொடுத்து மத்திய பாஜக அரசு அமலாக்க துறையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன் தினம் சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ராகுல் காந்தி கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
இந்நிலையில் நேற்று 2 வது நாளான இளைஞர் காங்கிரசார் சார்பில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில் மறித்தும் தண்டவாளத்தில் உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் இந்நிலையில் இன்று மாலை தஞ்சை ரயில் நிலையம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து அன்னை சோனியா காந்தியை விடுவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அப்போது தெரிவித்தனர்.