தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.

ஆண்கள் அணியில் தஞ்சை அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றனர்:
தஞ்சை மாநகராட்சி கிட்டு மைதானத்தில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 48 ஆண்கள் அணிகளும், 13 பெண்கள் அணிகளும் மோதின.


இன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்களுக்கான இறுதிப்போட்டி சிதம்பரம் அணியும் – கடலூர் அணியும் மோதியதில் – சிதம்பரம் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து கோப்பையுடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசையும் வென்றனர்.


ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் – தஞ்சை அணியும் – காரைக்குடி புதுவயல் அணிகளும் மோதியதில் தஞ்சை அணி முதல் இடத்தை வென்று கோப்பையையும், 1, 60,000 ரூபாயையும் வென்றனர்.
