தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.
தஞ்சையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் திருக்குறள், திருவருட்பா ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தஞ்சையில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமணம் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடந்த விழாவில்,
வள்ளலார் புகழை போற்றி சிறப்பு பட்டிமன்றம், சொற்பொழிவு, கருத்தரங்கம், திருவருட்பா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், திருக்குறள்., திருவருட்பா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
CATEGORIES தஞ்சாவூர்