தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை
தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை.

தஞ்சை மானம்புச்சாவடி சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஷேர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கீழவாசல் வாடிவாசல் கடைத்தெருவில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் கடந்த 17ம் தேதி திடீரென சிவக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்த கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவகுமார் மனைவி வாசுகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
