தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து போட்டி
தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சப்-ஜூனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியை தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழகம், கமலா சுப்பிரமணியம் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
இந்த போட்டியை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் ஆதவ்அர்ஜூனா, தஞ்சை மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
41 அணிகள் பங்கேற்பு
போட்டிகள் தினமும் காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் 472 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிறந்த வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழக அணி, இமாசலபிரதேசத்தில் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கிறது.
இதன் தொடக்க விழாவில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் கதிரவன், பொருளாளர் சதீஷ்ஆனந்த், கமலாசுப்பிரமணியம் மெட்ரிக் பள்ளி முதல்வர் வினிதா மற்றும் 38 மாவட்டங்களை சேர்ந்த கூடைப்பந்து பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.