BREAKING NEWS

தஞ்சை அன்னப்பன்பேட்டை அரசு பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை பேரணி நடத்திய நிலையில் 7 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.

தஞ்சை அன்னப்பன்பேட்டை அரசு பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை பேரணி நடத்திய நிலையில் 7 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது.

பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அன்னப்பன்பேட்டை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என்பதை எடுத்துக்கூறினர்.

பேரணியில் பள்ளியின் கலைக்குழு மாணவ மாணவிகள் பறை முழக்கம் சிலம்பம் தமிழ்நாடு அரசின் கல்வித் துறையில் நலத்திட்ட உதவிகள் பற்றிய முழக்கங்களை எழுப்பி கிராம மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியாகச் சென்றனர் பின்னர் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின் ராஜ் மாணவர் சேர்க்கை பேரணியை அடுத்து 7 பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )