தஞ்சை அம்மாபேட்டையில் அ.தி.மு.க நிர்வாகி பல கோடி ரூபாய் நூதன மோசடி, காட்டு கருவேல மரக்காடுகளுக்கும் பயிர்க்கடன் பெற்ற அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளராக 2017 ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது அம்மாபேட்டை விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நிலையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் மணி மீது மேலும் ஒரு புகாரை கூறியுள்ளனர்.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், 2017 ம் ஆண்டு முதல் செயலாளராக பணியாற்றி வரும் மணி, 5 ஏக்கர் நிலத்தில சாகுபடியே செய்யாமல் கருவேல மரக்காடுகளாக கிடக்கும் நிலத்திற்கு, பினாமி பெயரில் அவர் கடன் பெற்றுள்ளார், இதுபோல் நகைக்கடன்களையும் பினாமி பெயர்களில் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
