தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற தாய்க்கு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ரகுநாதன். கார்த்திகா. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு கடந்த 3 ம் தேதி கார்த்திகாவிற்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள், 1 ஆண்குழந்தை பிறந்ததன.

ஒவ்வொரு குழந்தைகளும் 1¾ முதல் 2 கிலோ வரை இருந்தது. தற்போது 3 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

என்ன நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி புதிய டீன் ஆக பொறுப்பேற்றுக்கொண்ட பாலாஜி நாதன் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்து மூன்று குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதை கேட்டறிந்து பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
