BREAKING NEWS

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

தஞ்சை பகுதியை சேர்ந்தவர்  9ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரது தந்தை குடிகாரர். இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் எழுந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.

 

 

பின்னர் மாணவியின் தாயை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் தாய் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான் (39) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

 

இதை பயன்படுத்திக் கொண்டு கடந்த 4ம் தேதி அன்று அந்த 14 வயது மாணவியடம், முகமது உஸ்மான் முறைகேடாக நடந்துள்ளார்.

 

 

இதையடுத்து அந்த மாணவி இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு முகமது உஸ்மானை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )