BREAKING NEWS

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி.

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி.

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததை அடுத்து கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த கரந்தை ராஜாராமன்மடத்து தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 75). இவர் கரந்தை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி இரவு கடையில் இருந்தார்.


அப்போது கஞ்சா போதையில் ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கடைவீதியில் நின்று கொண்டு சாலையில் செல்வோரை மிரட்டி பணம்கேட்டுள்ளனர். கடைகளில் புகுந்தும் பணம் கேட்டு மிரட்டினர். அப்போது செந்தில்வேல் கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


அருகில் இருந்த மருந்து கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர் முருகானந்தத்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துச்சென்றனர்.மேலும் ஒரு வியாபாாரியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்த ஹரிகரன் (21), கரந்தை பூக்களம் பகுதியை சேர்ந்த தினேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
ஹரிகரன் தப்பி ஓடிய போது கீழே விழுந்ததால் கை எலும்பு முறிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்வேல் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த தஞ்சை மேற்கு போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் தஞ்சை மேற்கு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்
இந்நிலையில் கரந்தை பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )