தஞ்சை, ஜூன்.28- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாடாலூர் சாதிவெறியர்களை கைது செய்யவேண்டும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நடவடிக்கையை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் பால்ராசு, கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாலா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் வக்கீல் காமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, நகர இணைச் செயலாளர் ஜோதி சுந்தர், பூதலூர் ஒன்றிய செயலாளர் சுகுமாறன் ஆகியோர் பேசினர்.
நகர செயலாளர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் கபில் நன்றி கூறினார்.
