தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம்.

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம் என்ற மாதாந்திர உதவி தேவை வழங்கும் திட்டம் மற்றும் நலத்த தொகுதிகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் முன்னிலை வகித்தார் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் ஜி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு அவ்வை நிதி உதவி திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் தொகுப்பு காய்கறிகள் தொகுப்பு விலை யில்லா தையல் எந்திரம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தஞ்சை மாநகராட்சியின் 39 வது வார்டு உறுப்பினர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
