தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 50 தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா மளிகைபொருட்கள் தொகுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்டம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,

அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய விலை இல்லாத மளிகை பொருள் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை ரயிலடியில் அருகேஉள்ள பாதாள சாக்கடை திட்டத் தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 50 தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான விலையில்லாத தொகுப்புமளிகை பொருட்கள் வழங்கினார்.

மேலும் அவர்கள் மாநகரத் தூய்மையாக வைத்திருக்கவும் முகசொலிக்காமல் பணியை மேற்கொள்வதையும் பாராட்டியதுடன் பண்டிகை கால வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்களின் மேலாளர் மனோகரன் கண்காணிப்பாளர் சாமிநாதன் மாநகராட்சி கவுன்சிலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையாளர் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
