தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
கடந்த ஐந்து நாட்களாக அக்னி நட்சத்திரம் வாட்டி வந்த நிலையில் பத்து நிமிடம் மட்டும் தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
கடந்த நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது, இளநீர், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, சர்பத், பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் படாத பாடு பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை தஞ்சை மாவட்டம் திருவையாறு நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதேபோல் தஞ்சை நகர் பகுதி வல்லம் பூதலூர் உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் காற்று வீசியது.இருப்பினும் பத்து நிமிடத்திற்குள் இந்த மழை நின்றதால் மீண்டும் வெயில் அடிக்க ஆரம்பித்தது.