BREAKING NEWS

தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 

தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு வழக்கறிஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத் தொடக்க விழா நேற்று காலை (12-ம் தேதி) நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமர்சிங் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது. இங்கு 1 ஆம்புலன்ஸ் மற்றும் 1 இருசக்கர மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீதிமன்ற அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களின் அவசர மருத்துவச் சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த சேவை அவரவர் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது விளம்பரத்துக்காக அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனின் பாதுகாப்பிற்காக மட்டும்தான் இங்கு மருத்துவச் சேவை தொடங்கப்பட்டுள்ளன.

 

இந்த சேவை உங்கள் அனைவர்களோடு ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முடிவில் பேக்சோ நீதிமன்ற நீதிபதி செளந்தர் ராஜனா நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )