தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி மனு
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி நறிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் உட்பட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி தஞ்சை ஆட்சியரிடம் நறிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று தலைமுறையாக நரிகுறவர் சமூகத்தை சார்ந்தவர்கள் பாசிமணி, ஊசிமணி, சோப்பு, சீப்பு, ஹேர்பின், சோப்பு டப்பா போன்றவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளாதால் நரிகுறவர் சமூக மக்கள் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

எனவே இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு உடன் தலையிட்டு 26 நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் பழைய பேருந்து நிலையத்தில் பாசி மணி உட்பட பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
