தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
![தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221001-WA0075.jpg)
தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் வாழ்வில் விடியல் பிறந்துள்ளதாக பொம்மை வியாபாரிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு இயங்கி வந்த தலையாட்டி பொம்மை கடைகள் 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது திடீரென இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
இதை எடுத்து கடந்த எட்டு ஆண்டுகளாக பொம்மை வியாபாரிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் வழக்குகளை சந்தித்து சிறைக்கும் சென்று வந்தனர் சாலை ஓரங்களில் பொம்மை வியாபாரம் செய்து வந்த நிலையில்,
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் ஆகியோரின் ஏற்பாட்டில் சுற்றுலா பயணிகள் வந்து திரும்பும் இடத்தில் 34 பொம்மை கடைகள் அமைக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் தங்களுக்கு விடியல் பிறந்துள்ளதாக வியாபாரிகளும் அவர்களின் குடும்பத்தாரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.